Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 102

1யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; 1 என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக. 1

2என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; 1 உமது செவியை என்னிடத்தில் சாயும்; 1 நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும். 1

3என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; 1 என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. 1

4என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; 1 என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன். 1

5என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. 1

6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; 1 பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். 1

7நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். 1

8நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; 1 என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள். 1

9நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், 1 உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். 1

10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, 1 என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். 1

11என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; 1 புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். 1

12யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; 1 உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். 1

13தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; 1 அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. 1

14உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, 1 அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். 1

15யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். 1

16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், 1 அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். 1

17அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், 1 பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். 1

18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; 1 உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள். 1

19யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், 1 கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1

20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, 1 வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். 1

21யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, 1

22சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், 1 எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள். 1

23பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, 1 என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். 1

24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; 1 உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 1

25நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; 1 வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. 1

26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; 1 அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். 1

27நீரோ மாறாதவராக இருக்கிறீர்; 1 உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. 1

28உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; 1 அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

← Psalms 101Read In The App, Free →Psalms 103 →

Study Psalms 102

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150