Psalms 66
1பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் 1 கெம்பீரமாகப் பாடுங்கள். 1
2அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, 1 அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். 1
3தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; 1 உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் 1 உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். 1
4பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; 1 அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா) 1
5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; 1 அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர். 1
6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; 1 ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; 1 அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். 1
7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; 1 அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; 1 துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா) 1
8மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். 1
9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், 1 நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார். 1
10தேவனே, எங்களைச் சோதித்தீர்; 1 வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 1
11எங்களை வலையில் அகப்படுத்தி, 1 எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். 1
12மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; 1 தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; 1 செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். 1
13சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; 1
14என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, 1 என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை 1 உமக்குச் செலுத்துவேன். 1
15ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; 1 காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) 1
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; 1 அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். 1
17அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், 1 என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார். 1
18என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், 1 ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார். 1
19மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், 1 என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். 1
20என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், 1 தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் 1 இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.