Psalms 44
1தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் 1 நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; 1 அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம். 1
2தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; 1 மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர். 1
3அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; 1 அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; 1 நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், 1 உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், 1 உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. 1
4தேவனே, நீர் என்னுடைய ராஜா; 1 யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக + 44:4 தேவனே ஜெயத்தை யாக்கோபுக்கு கட்டளையிடும் . 1
5உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, 1 எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம். 1
6என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், 1 என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை. 1
7நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, 1 எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். 1
8தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; 1 உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா) 1
9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, 1 வெட்கமடையச்செய்கிறீர்; 1 எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர். 1
10எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; 1 எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். 1
11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, 1 தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். 1
12நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; 1 அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. 1
13எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், 1 எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், 1 பழிப்புகளுக்கும் வைக்கிறீர். 1
14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், 1 மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். 1
15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், 1 பழிவாங்குகிறவர்னிமித்தமும், 1
16என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; 1 என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. 1
17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், 1 உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, 1 உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை. 1
18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, 1 மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், 1
19எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை. 1
20நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, 1 அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், 1
21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? 1 இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 1
22உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; 1 அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். 1
23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? 1 எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும். 1
24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, 1 எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? 1
25எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; 1 எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. 1
26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; 1 உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.