Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 81

1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, 1 யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். 1

2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, 1 பாட்டு பாடுங்கள். 1

3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், 1 நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். 1

4இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், 1 யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது. 1

5நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, 1 இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். 1

6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; 1 அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. 1

7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; 1 இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; 1 மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா) 1

8என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; 1 இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும். 1

9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; 1 அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம். 1

10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; 1 உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன். 1

11என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; 1 இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. 1

12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; 1 தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். 1

13ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, 1 இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்! 1

14நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, 1 என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன். 1

15அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; 1 அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். 1

16செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; 1 கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

← Psalms 80Read In The App, Free →Psalms 82 →

Study Psalms 81

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150