Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 31

1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; 1 உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 1

2உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; 1 நீர் எனக்குப் பலத்த கோபுரமும், 1 எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும். 1

3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; 1 உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, 1 என்னை நடத்தியருளும். 1

4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; 1 தேவனே நீரே எனக்கு அடைக்கலம். 1

5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; 1 சத்தியபரனாகிய யெகோவாவே, 1 நீர் என்னை மீட்டுக்கொண்டீர். 1

6பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, 1 யெகோவாவையே நம்பியிருக்கிறேன். 1

7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; 1 நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, 1 என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர். 1

8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், 1 என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 1

9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; 1 துக்கத்தினால் என் கண்ணும் 1 என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. 1

10என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், 1 என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; 1 என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, 1 என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது. 1

11என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், 1 நான் என் அயலாருக்கு நிந்தையும், 1 எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; 1 வீதியிலே என்னைக் கண்டவர்கள் 1 எனக்கு விலகி ஓடிப்போனார்கள். 1

12செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; 1 உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன். 1

13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; 1 எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் 1 திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; 1 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள். 1

14நானோ, யெகோவாவே, 1 உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நீரே என் தேவன் என்று சொன்னேன். 1

15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; 1 என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் 1 என்னைத் தப்புவியும். 1

16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, 1 உமது கிருபையினாலே என்னை இரட்சியும். 1

17யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். 1

18நீதிமானுக்கு விரோதமாகப் 1 பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. 1

19உமக்குப் பயந்தவர்களுக்கும், 1 மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், 1 நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது! 1

20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, 1 நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, 1 உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 1

21யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், 1 அவருக்கு ஸ்தோத்திரம். 1

22உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று 1 நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; 1 ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, 1 என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். 1

23யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, 1 நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; 1 உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, 1 வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார். 1

24யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, 1 நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், 1 அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.

← Psalms 30Read In The App, Free →Psalms 32 →

Study Psalms 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150