Psalms 148
1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, 1 யெகோவாவை துதியுங்கள்; 1 உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். 1
2அவருடைய தூதர்களே, 1 நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்; 1 அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள். 1
3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; 1 பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். 1
4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; 1 வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1
5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 1
6அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; 1 மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார். 1
7பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; 1 பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே, 1
8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, 1 அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, 1
9மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, 1 எல்லா கேதுருக்களே, 1
10காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, 1 ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, 1
11பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, 1 பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே, 1
12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, 1 யெகோவாவை துதியுங்கள். 1
13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; 1 அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 1
14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், 1 தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, 1 தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். 1 அல்லேலூயா.