Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 62

1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 1 அவரால் என் இரட்சிப்பு வரும். 1

2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 1

3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், 1 நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், 1 சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். 1

4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே 1 அவர்கள் ஆலோசனைசெய்து, 1 பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, 1 தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். 1 (சேலா) 1

5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; 1 நான் நம்புகிறது அவராலே வரும். 1

6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

7என்னுடைய இரட்சிப்பும், 1 என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; 1 பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 1

8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; 1 அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; 1 தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 1

9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; 1 தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் 1 மாயையிலும் லேசானவர்கள். 1

10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; 1 செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். 1

11தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; 1 வல்லமை தேவனுடையது என்பதே. 1

12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! 1 தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.

← Psalms 61Read In The App, Free →Psalms 63 →

Study Psalms 62

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150