Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 24

1பூமியும் அதின் நிறைவும், 1 உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. 1

2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, 1 அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.

3யார் யெகோவாவுடைய மலையில் + 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் ஏறுவான்? 1 யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? + 24:3 நிலைநிற்பான் 1

4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, 1 தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், 1 பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. 1

5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், 1 தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 1

6இதுவே அவரைத் தேடி விசாரித்து, 1 அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) 1

7வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; 1 நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 1

8யார் இந்த மகிமையின் இராஜா? 1 அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; 1 அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. 1

9வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; 1 நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 1

10யார் இந்த மகிமையின் இராஜா? 1 அவர் சேனைகளின் யெகோவா; 1 அவரே மகிமையின் இராஜா (சேலா).

← Psalms 23Read In The App, Free →Psalms 25 →

Study Psalms 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150