Psalms 122
1யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் 1 என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன். 1
2எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. 1
3எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. 1
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் 1 யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும். 1
5அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய 1 நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 1
6எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; 1 உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். 1
7உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், 1 உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். 1
8என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், 1 உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன். 1
9எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக 1 உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.