Psalms 147
1யெகோவாவை துதியுங்கள்; 1 நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, 1 துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. 1
2யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; 1 துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 1
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 1 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1
4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, 1 அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். 1
5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; 1 அவருடைய அறிவு அளவில்லாதது. 1
6யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; 1 துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். 1
7யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; 1 நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். 1
8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1
9அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 1
10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; 1 வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். 1
11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் 1 யெகோவா பிரியமாக இருக்கிறார். 1
12எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; 1 சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. 1
13அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, 1 உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 1
14அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, 1 செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 1
15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; 1 அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. 1
16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; 1 சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 1
17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; 1 அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 1
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; 1 தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 1
19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், 1 இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 1
20அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; 1 அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். 1 அல்லேலூயா.