Psalms 30
1யெகோவாவே, 1 என்னுடைய எதிரிகள் 1 என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், 1 நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், 1 நான் உம்மைப் போற்றுவேன். 1
2என் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், 1 என்னை நீர் குணமாக்கினீர். 1
3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, 1 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 1
4யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, 1 அவரைப் புகழ்ந்துபாடி, 1 அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். 1
5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, 1 அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; 1 மாலையில் அழுகை வரும், 1 அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 1
6நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, 1 நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். 1
7யெகோவாவே, உம்முடைய தயவினால் 1 நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; 1 உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; 1
8நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? 1 புழுதி உம்மைத் துதிக்குமோ? 1 அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? 1
9யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து 1 என்மேல் இரக்கமாக இரும்; 1 யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; 1
10யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். 1
11என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; 1 என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் 1 உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக 1 நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, 1 மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 1
12என் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.