Psalms 12
1காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; 1 உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை. 1
2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; 1 கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். 1
3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், 1 பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. 1
4அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; 1 யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். 1
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, 1 அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1
6யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, 1 புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான 1 சுத்தசொற்களாக இருக்கின்றன. 1
7யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, 1 எங்களை + 12:7 அவர்களைஎன்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். 1
8மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, 1 துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.