Psalms 19
1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, 1 ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 1
2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, 1 இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 1
3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, 1 அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 1
4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், 1 அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; 1 அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 1
5அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, 1 பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. 1
6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, 1 அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; 1 அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. 1
7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், 1 ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், 1 பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 1
8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், 1 இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 1
9யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், 1 என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், 1 அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 1
10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், 1 தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 1
11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; 1 அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 1
12தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? 1 மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும். 1
13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; 1 அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; 1 அப்பொழுது நான் உத்தமனாகி, 1 பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன். 1
14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, 1 என் வாயின் வார்த்தைகளும், 1 என் இருதயத்தின் தியானமும், 1 உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.