Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 145

1ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, 1 உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன். 1

2நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, 1 எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். 1

3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. 1

4தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, 1 உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். 1

5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், 1 உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். 1

6மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; 1 உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். 1

7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, 1 உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். 1

8யெகோவா இரக்கமும் மன உருக்கமும், 1 நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். 1

9யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; 1 அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது. 1

10யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; 1 உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள். 1

11மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், 1 உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; 1

12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, 1 உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். 1

13உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், 1 உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. 1

14யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, 1 மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். 1

15எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; 1 ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். 1

16நீர் உமது கையைத் திறந்து, 1 எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். 1

17யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், 1 தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். 1

18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், 1 உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், 1 யெகோவா அருகில் இருக்கிறார். 1

19அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, 1 அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, 1 அவர்களைப் பாதுகாக்கிறார். 1

20யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, 1 துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார். 1

21என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; 1 மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை 1 எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.

← Psalms 144Read In The App, Free →Psalms 146 →

Study Psalms 145

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150