Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 141

1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், 1 என்னிடத்திற்கு விரைந்துவாரும்; 1 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, 1 என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும். 1

2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், 1 என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 1

3யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; 1 என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 1

4அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி 1 என்னுடைய இருதயத்தைத் 1 துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; 1 அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. 1

5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, 1 என்னைக் கடிந்துகொள்ளட்டும்; 1 அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; 1 என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; 1 அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன். 1

6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து 1 தள்ளப்பட்டுபோகிறபோது, 1 என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். 1

7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, 1 எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. 1

8ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, 1 என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; 1 உம்மை நம்பியிருக்கிறேன்; 1 என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும். 1

9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், 1 அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். 1

10துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; 1 நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

← Psalms 140Read In The App, Free →Psalms 142 →

Study Psalms 141

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150