Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 51

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், 1 உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். 1

2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, 1 என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும். 1

3என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; 1 என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. 1

4தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, 1 உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்; 1 நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, 1 உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன். 1

5இதோ, நான் அநீதியில் உருவானேன்; 1 என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். 1

6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; 1 உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். 1

7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், 1 அப்பொழுது நான் சுத்தமாவேன்; 1 என்னைக் கழுவியருளும்; 1 அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். 1

8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், 1 அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும். 1

9என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். 1

10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். 1

11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், 1 உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். 1

12உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, 1 உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். 1

13அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; 1 பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். 1

14தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, 1 இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; 1 அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும். 1

15ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; 1 அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 1

16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; 1 தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. 1

17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; 1 தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை. 1

18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; 1 எருசலேமின் மதில்களைக் கட்டும். 1

19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய 1 நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; 1 அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

← Psalms 50Read In The App, Free →Psalms 52 →

Study Psalms 51

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150