Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 101

1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; 1 யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். 1

2உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; 1 எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! 1 என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 1

3தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; 1 வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; 1 அது என்னைப் பற்றாது. 1

4மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; 1 பொல்லாதவனை ஏற்கமாட்டேன். 1

5பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; 1 பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 1

6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; 1 உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். 1

7கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; 1 பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. 1

8அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, 1 தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

← Psalms 100Read In The App, Free →Psalms 102 →

Study Psalms 101

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150