Psalms 46
1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1
2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், 1
3அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், 1 நாம் பயப்படமாட்டோம். (சேலா) 1
4ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், 1 உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும். 1
5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; 1 அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார். 1
6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; 1 அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. 1
7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; 1 யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) 1
8பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள். 1
9அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; 1 வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; 1 இரதங்களை + 46:9 கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது. நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 1
10நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, 1 நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; 1 தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 1
11சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், 1 யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).