Psalms 60
1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், 1 எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும். 1
2பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; 1 அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது. 1
3உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; 1 தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். 1
4சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு 1 ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா) 1
5உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி, 1 உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும். 1
6தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார், 1 ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, 1 சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 1
7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, 1 எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல். 1
8மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், 1 ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; 1 பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். 1
9பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? 1 ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்? 1
10எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? 1 எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ? 1
11ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; 1 மனிதனுடைய உதவி வீண். 1
12தேவனாலே பலத்தோடு போராடுவோம்; 1 அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.