Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 26

1யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

2யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; 1 என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 1

3உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன். 1

4ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, 1 வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 1

5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; 1 துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். 1

6யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, 1

7எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். 1

8யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், 1 உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன். 1

9என் ஆத்துமாவைப் பாவிகளோடும், 1 என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும். 1

10அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; 1 அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது. 1

11நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; 1 என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். 1

12என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; 1 சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.

← Psalms 25Read In The App, Free →Psalms 27 →

Study Psalms 26

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150