Psalms 73
1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு 1 தேவன் நல்லவராகவே இருக்கிறார். 1
2ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், 1 என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. 1
3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1
4மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; 1 அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது. 1
5மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; 1 மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். 1
6ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், 1 கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். 1
7அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; 1 அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. 1
8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; 1 பெருமையாகப் பேசுகிறார்கள். 1
9தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; 1 அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது. 1
10ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; 1 தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும். 1
11தேவனுக்கு அது எப்படித் தெரியும்? 1 உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? 1 என்று சொல்லுகிறார்கள். 1
12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; 1 இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, 1 சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். 1
13நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, 1 குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். 1
14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், 1 காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். 1
15இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், 1 இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். 1
16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; 1 நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, 1
17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, 1 அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. 1
18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1
19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! 1 பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். 1
20தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, 1 நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர். 1
21இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, 1 என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். 1
22நான் காரியம் அறியாத மூடனானேன்; 1 உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். 1
23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; 1 என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 1
24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, 1 முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 1
25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? 1 பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 1
26என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; 1 தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் 1 என்னுடைய பங்குமாக இருக்கிறார். 1
27இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; 1 உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர். 1
28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; 1 நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி 1 கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.