Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 59

1என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; 1 என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 1

2அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, 1 இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். 1

3இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; 1 யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், 1 பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். 1

4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், 1 ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; 1 எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். 1

5சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; 1 வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) 1

6அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 1

7இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; 1 அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, 1 கேட்கிறவன் யார் என்கிறார்கள். 1

8ஆனாலும் யெகோவாவே, 1 நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; 1 அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். 1

9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; 1 தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 1

10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; 1 தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். 1

11அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; 1 எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, 1 அவர்களைத் தாழ்த்திப்போடும். 1

12அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; 1 அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் 1 தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக. 1

13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, 1 அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; 1 இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) 1

14அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, 1 ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 1

15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், 1 முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். 1

16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, 1 காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; 1 எனக்கு நெருக்கமுண்டான நாளிலே 1 நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 1

17என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; 1 தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், 1 கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.

← Psalms 58Read In The App, Free →Psalms 60 →

Study Psalms 59

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150