Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 22

1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? 1 எனக்கு உதவி செய்யாமலும், 1 நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? 1

2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், 1 பதில் கொடுக்கவில்லை; 1 இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. 1

3இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். 1

4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; 1 நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 1

5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; 1 உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள். 1

6நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; 1 மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், 1 மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். 1

7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, 1 உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: 1

8யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, 1 அவர் இவனை விடுவிக்கட்டும்; 1 இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, 1 இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள். 1

9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; 1 என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். 1

10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; 1 நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர். 1

11என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; 1 ஆபத்து நெருங்கியிருக்கிறது, 1 உதவி செய்ய யாரும் இல்லை. 1

12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. 1

13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், 1 என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். 1

14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; 1 என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, 1 என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, 1 என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. 1

15என் பெலன் + 22:15 தொண்டை ஓட்டைப்போல் காய்ந்தது; 1 என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; 1 என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். 1

16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; 1 என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். 1

17என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; 1 அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 1

18என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, 1 என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். 1

19ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். 1

20என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், 1 எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும். 1

21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; 1 நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் + 22:21 பதில் தரும். 1

22உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, 1 சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 1

23யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, 1 அவரைத் துதியுங்கள்; 1 யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; 1 இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். 1

24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், 1 அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, 1 தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். 1

25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; 1 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன். 1

26ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; 1 உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். 1

27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; 1 தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் + 22:27 உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 1

28ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். 1

29பூமியின் செல்வந்தர் அனைவரும் + 22:29 சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்; 1 புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். 1 ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. 1

30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; 1 தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். 1

31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று 1 பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

← Psalms 21Read In The App, Free →Psalms 23 →

Study Psalms 22

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150