Psalms 40
1யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 1 அவர் என்னிடமாகச் சாய்ந்து, 1 என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். 1
2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, 1 என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, 1 என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, 1
3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; 1 அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். 1
4பெருமைக்காரர்களையும் பொய்யைச் + 40:4 தேவர்களையும் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், 1 யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான். 1
5என் தேவனாகிய யெகோவாவே, 1 நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; 1 ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1 நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். 1
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், 1 என் காதுகளைத் திறந்தீர்; 1 சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. 1
7அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; 1
8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; 1 உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 1
9மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; 1 என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், 1 யெகோவாவே, நீர் அதை அறிவீர். 1
10உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; 1 உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; 1 உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. 1
11யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; 1 உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும். 1
12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, 1 என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, 1 அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, 1 என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது. 1
13யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; 1 யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். 1
14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, 1 எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. 1
15என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், 1 தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக. 1
16உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; 1 உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று 1 எப்பொழுதும் சொல்வார்களாக. 1
17நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், 1 யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; 1 தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; 1 என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.