Psalms 92
1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, 1 உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், 1
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், 1 தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், 1
3காலையிலே உமது கிருபையையும், 1 இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். 1
4யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், 1 உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். 1
5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! 1 உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 1
6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; 1 மூடன் அதை உணரமாட்டான். 1
7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, 1 அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, 1 அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 1
8யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். 1
9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; 1 உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். 1
10என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; 1 புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். 1
11என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; 1 எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு 1 நேரிடுவதை என்னுடைய காது கேட்கும். 1
12நீதிமான் பனையைப்போல் செழித்து, 1 லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 1
13யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் 1 எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். 1
14யெகோவா உத்தமரென்றும், 1 என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் 1 அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி, 1
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, 1 புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.