Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 105

1யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், 1 அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1

2அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1

3அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1

4யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; 1 அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். 1

5அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! 1 அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 1

6அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 1

7அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, 1 அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 1

8ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், 1 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், 1

9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

10அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், 1 இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 1

11உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். 1

12அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். 1

13அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், 1 ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். 1

14அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், 1 அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: 1

15நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், 1 என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். 1

16அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். 1

17அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; 1 யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். 1

18அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; 1 அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. 1

19யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை 1 அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 1

20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; 1 மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். 1

21தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், 1 தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், 1

22அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், 1 தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். 1

23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; 1 யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். 1

24அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, 1 அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். 1

25தம்முடைய மக்களைப் பகைக்கவும், 1 தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், 1 அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். 1

26தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். 1

27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், 1 காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். 1

28அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; 1 அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. 1

29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, 1 அவர்களுடைய மீன்களை சாகடித்தார். 1

30அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; 1 அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. 1

31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. 1

32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, 1 அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். 1

33அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, 1 அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். 1

34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, 1

35அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, 1 அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. 1

36அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், 1 அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். 1

37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; 1 அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. 1

38எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். 1

39அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, 1 இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். 1

40இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; 1 வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். 1

41கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. 1

42அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், 1 தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, 1

43தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், 1 தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, 1

44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், 1 தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், 1

45அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; 1 அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். 1 அல்லேலூயா.

← Psalms 104Read In The App, Free →Psalms 106 →

Study Psalms 105

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150