Psalms 116
1யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், 1 அவரில் அன்புகூருகிறேன். 1
2அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், 1 நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன். 1
3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1
4அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு: 1 யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். 1
5யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், 1 நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர். 1
6யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்; 1 நான் மெலிந்துபோனேன், 1 அவர் என்னைப் பாதுகாத்தார். 1
7என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், 1 நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 1
8என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், 1 என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1
9நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன். 1
10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; 1 நான் மிகவும் வருத்தப்பட்டேன். 1
11எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். 1
12யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 1
13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1
14நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். 1
15யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. 1
16யெகோவாவே, நான் உமது அடியேன்; 1 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; 1 என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 1
17நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, 1 யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். 1
18நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும், 1
19யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், 1 எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். 1 அல்லேலூயா.