Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 139

1யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, 1 அறிந்திருக்கிறீர். 1

2என்னுடைய உட்காருதலையும் 1 என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; 1 என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். 1

3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; 1 என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். 1

4என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, 1 இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 1

5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, 1 உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். 1

6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், 1 எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. 1

7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? 1 உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? 1

8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; 1 நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். 1

9நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, 1 கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,

10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், 1 உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். 1

11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். 1

12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; 1 இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; 1 உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. 1

13நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; 1 என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; 1 உமது செயல்கள் அதிசயமானவைகள்; 1 அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். 1

15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, 1 பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, 1 என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. 1

16என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; 1 என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், 1 அவைகள் உருவேற்படும் நாட்களும், 1 உமது புத்தகத்தில் எழுதியிருந்தது. 1

17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; 1 அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். 1

18அவைகளை நான் எண்ணப்போனால், 1 மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன். 1

19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; 1 இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள். 1

20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; 1 உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள். 1

21யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், 1 உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை 1 அருவருக்காமலும் இருப்பேனோ? 1

22முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; 1 அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன். 1

23தேவனே, என்னை ஆராய்ந்து, 1 என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; 1 என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 1

24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, 1 நித்திய வழியிலே என்னை நடத்தும்.

← Psalms 138Read In The App, Free →Psalms 140 →

Study Psalms 139

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150