Psalms 43
1தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, 1 பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், 1 அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும். 1
2என் பெலனாகிய தேவன் நீர்; 1 ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 1
3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; 1 அவைகள் என்னை நடத்தி, 1 உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும். 1
4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், 1 எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, 1 என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 1
5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; 1 என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.