Psalms 142
1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 1
2அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; 1 அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 1
3என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, 1 நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; 1 நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 1
4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 1 என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 1 எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 1 என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 1
5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீரே என் அடைக்கலமும், 1 உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 1
6என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், 1 நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; 1 என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், 1 அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். 1
7உமது பெயரை நான் துதிக்கும்படி, 1 என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; 1 எனக்கு நீர் தயவு செய்யும்போது 1 நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.