Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 119

1யெகோவாவுடைய வேதத்தின்படி 1 நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். 1

2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, 1 அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 1

3அவர்கள் அநியாயம் செய்வதில்லை; 1 அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 1

4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி 1 நீர் கற்றுக்கொடுத்தீர். 1

5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, 1 என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். 1

6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, 1 வெட்கப்பட்டுப்போவதில்லை. 1

7உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, 1 செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். 1

8உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; 1 முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். பேத். 1

9வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? 1 உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. 1

10என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், 1 என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். 1

11நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, 1 உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். 1

12யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; 1 உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

13உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். 1

14திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, 1 நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். 1

15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். 1

16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; 1 உமது வசனத்தை மறவேன். கிமெல். 1

17உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, 1 உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். 1

18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, 1 என்னுடைய கண்களைத் திறந்தருளும். 1

19பூமியிலே நான் அந்நியன்; 1 உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். 1

20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. 1

21உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட 1 பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். 1

22நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; 1 நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். 1

23அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; 1 உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். 1

24உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், 1 எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத். 1

25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; 1 உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். 1

26என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது 1 எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; 1 அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். 1

28துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; 1 உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். 1

29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, 1 உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். 1

30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, 1 உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். 1

31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; 1 யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். 1

32நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, 1 நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ. 1

33யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; 1 முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். 1

34எனக்கு உணர்வைத் தாரும்; 1 அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, 1 என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். 1

35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; 1 நான் அதில் பிரியமாக இருக்கிறேன். 1

36என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், 1 உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். 1

37மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, 1 உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். 1

38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். 1

39நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். 1

40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; 1 உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ. 1

41யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, 1 உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. 1

42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; 1 உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். 1

43சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். 1

44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். 1

45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், 1 அகலமான பாதையில் நடப்பேன். 1

46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, 1 ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். 1

47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். 1

48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், 1 உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன். 1

49நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை 1 உமது அடியேனுக்காக நினைத்தருளும். 1

50அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், 1 உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. 1

51பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், 1 நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

52யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை 1 நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். 1

53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. 1

54நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே 1 உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. 1

55யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, 1 உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். 1

56நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், 1 இது எனக்குக் கிடைத்தது. ஹெத். 1

57யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; 1 நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். 1

58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; 1 உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். 1

59என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, 1 என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். 1

60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, 1 நான் தாமதிக்காமல் விரைந்தேன். 1

61துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், 1 உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. 1

62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, 1 உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன். 1

63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். 1

64யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; 1 உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத். 1

65யெகோவாவே, உமது வசனத்தின்படி 1 உமது அடியேனை நன்றாக நடத்தினீர். 1

66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், 1 உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். 1

67நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; 1 இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். 1

68தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; 1 உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

69பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; 1 நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். 1

70அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, 1 உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். 1

71நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; 1 அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். 1

72அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, 1 நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட். 1

73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, 1 என்னை உருவாக்கினது; 1 உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். 1

74நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். 1

75யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், 1 உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். 1

76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, 1 உமது கிருபை என்னைத் தேற்றட்டும். 1

77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; 1 உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. 1

78பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; 1 நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். 1

79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். 1

80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, 1 என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப். 1

81உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, 1 உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. 1

83புகையிலுள்ள தோல்பை போலானேன்; 1 உமது பிரமாணங்களையோ மறவேன். 1

84உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? 1 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? 1

85உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். 1

86உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; 1 அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; 1 நீர் எனக்கு உதவி செய்யும். 1

87அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; 1 ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. 1

88உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; 1 அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். லாமேட். 1

89யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் 1 வானங்களில் நிலைத்திருக்கிறது. 1

90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; 1 பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. 1

91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; 1 அனைத்தும் உம்மைச் சேவிக்கும். 1

92உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், 1 என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 1

93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; 1 அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். 1

94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; 1 உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். 1

95துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; 1 நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 1

96நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; 1 உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம். 1

97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! 1 நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். 1

98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; 1 அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. 1

99உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், 1 எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். 1

100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், 1 முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். 1

101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, 1 எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். 1

102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், 1 நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். 1

103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; 1 என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் 1 இனிமையானதாக இருக்கும். 1

104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், 1 ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன். 1

105உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், 1 என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. 1

106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; 1 அதை நிறைவேற்றுவேன். 1

107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; 1 யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். 1

108யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, 1 உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். 1

109என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; 1 ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். 1

110துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; 1 ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். 1

111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1

112முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக். 1

113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். 1

114என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 1

116நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; 1 என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். 1

117என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, 1 எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். 1

118உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; 1 அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. 1

119பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; 1 ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். 1

120உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; 1 உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின். 1

121நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். 1

122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; 1 பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். 1

123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் 1 காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. 1

124உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, 1 உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

125நான் உமது ஊழியன்; 1 உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். 1

126நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; 1 அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். 1

127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். 1

128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, 1 அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே. 1

129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; 1 ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். 1

130உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, 1 பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 1

131உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், 1 என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். 1

132உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். 1

133உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, 1 ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். 1

134மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; 1 அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். 1

135உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, 1 உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

136உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், 1 என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே. 1

137யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். 1

138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். 1

139என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், 1 என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.

140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, 1 உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். 1

141நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; 1 ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். 1

142உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். 1

143துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; 1 ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. 1

144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், 1 அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப். 1

145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; 1 உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். 1

146உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; 1 அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். 1

147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

148உமது வசனத்தைத் தியானிக்கும்படி, 1 குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். 1

149உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; 1 யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். 1

150தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; 1 அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். 1

151யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; 1 உமது கற்பனைகளெல்லாம் உண்மை. 1

152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, 1 அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். ரேஷ். 1

153என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; 1 உமது வேதத்தை மறக்கமாட்டேன். 1

154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், 1 உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். 1

155இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, 1 அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். 1

156யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; 1 உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். 1

157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; 1 ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். 1

158உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, 1 எனக்கு அருவருப்பாக இருந்தது. 1

159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, 1 உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். 1

160உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், 1 உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன். 1

161அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், 1 ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. 1

162மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, 1 நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். 1

163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். 1

164உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். 1

165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; 1 அவர்களுக்கு தடைகள் இல்லை. 1

166யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, 1 உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். 1

167என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; 1 அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். 1

168உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; 1 என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள. 1

169யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; 1 உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். 1

170என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; 1 உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். 1

171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, 1 என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். 1

172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், 1 என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். 1

173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், 1 உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். 1

174யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; 1 உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. 1

175என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; 1 உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். 1

176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; 1 உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.

← Psalms 118Read In The App, Free →Psalms 120 →

Study Psalms 119

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150