Psalms 45
1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; 1 நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; 1 என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 1
2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; 1 உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; 1 ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். 1
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய 1 உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, 1
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், 1 உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; 1 உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும். 1
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், 1 அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; 1 மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். 1
6உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, + 45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது 1 உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. 1
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; 1 ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் 1 உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார். 1
8தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, 1 நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் 1 வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. 1
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, 1 இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். 1
10மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; 1 உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. 1
11அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; 1 அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். 1
12தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; 1 மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள். 1
13இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; 1 அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது. 1
14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, 1 ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; 1 அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் 1 உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். 1
15அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, 1 ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள். 1
16உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; 1 அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். 1
17உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; 1 இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.