Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 56

1தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், 1 நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 1

2என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; 1 உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 1

3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 1

4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், 1 நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? 1

5எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; 1 எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது. 1

6அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; 1 என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். 1

7அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? 1 தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். 1

8என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; 1 என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; 1 அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? 1

9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; 1 தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். 1

10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; 1 யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். 1

11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; 1 மனிதன் எனக்கு என்ன செய்வான்? 1

12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; 1 உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். 1

13நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, 1 நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?

← Psalms 55Read In The App, Free →Psalms 57 →

Study Psalms 56

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150