Psalms 48
1யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், 1 தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 1
2வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, 1 அதுவே மகாராஜாவின் நகரம். 1
3அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். 1
4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். 1
5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். 1
6அங்கே நடுக்கங்கொண்டு, 1 பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள். 1
7கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். 1
8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; 1 தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா) 1
9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, 1 உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 1
10தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல 1 உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; 1 உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது. 1
11உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, 1 யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. 1
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். 1
13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, 1 அதின் சுவரை கவனித்து, 1 அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். 1
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; 1 மரணம்வரை நம்மை நடத்துவார்.