Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 68

1தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, 1 அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 1

2புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; 1 மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள். 1

3நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, 1 ஆனந்த சந்தோஷமடைவார்கள். 1

4தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; 1 வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; 1 அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். 1

5தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், 1 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார். 1

6தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, 1 கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; 1 துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். 1

7தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) 1

8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; 1 இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. 1

9தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்; 1 இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர். 1

10உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; 1 தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர். 1

11ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. 1

12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; 1 வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 1

13நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், 1 வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் + 68:13 புறாக்கள் இஸ்ரவேல் பெண்களுக்கு அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். 1

14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, 1 அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது. 1

15தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; 1 பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. 1

16உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; 1 ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார். 1

17தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும், 1 ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார். 1

18தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, 1 சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; 1 தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, 1 துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 1

19எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; 1 நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா) 1

20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; 1 ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. 1

21மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், 1 தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார். 1

22உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், 1 உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும், 1

23என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; 1 அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார். 1

24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; 1 என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். 1

25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், 1 சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். 1

26இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, 1 சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 1

27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், 1 அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், 1 நப்தலியின் பிரபுக்களும் உண்டு. 1

28உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; 1 தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும். 1

29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, 1 ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். 1

30நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; 1 ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; 1 யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார். 1

31பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; 1 எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும். 1

32பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா) 1

33ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; 1 இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார். 1

34தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; 1 அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. 1

35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; 1 இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; 1 தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

← Psalms 67Read In The App, Free →Psalms 69 →

Study Psalms 68

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150