Psalms 143
1யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், 1 என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; 1 உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும். 1
2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, 1 அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். 1
3எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, 1 என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, 1 வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான். 1
4என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; 1 என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 1
5ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; 1 உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். 1
6என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; 1 வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) 1
7யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், 1 என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; 1 நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, 1 உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். 1
8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், 1 உம்மை நம்பியிருக்கிறேன், 1 நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; 1 உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1
9யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; 1 உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 1
10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், 1 நீரே என் தேவன்; 1 உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். 1
11யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; 1 உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை 1 பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும். 1
12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, 1 என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; 1 நான் உமது அடியேன்.