Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 107

1யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1

2யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, 1

3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள 1 பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், 1 அப்படிச் சொல்வார்களாக. 1

4அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், 1 வனாந்திரத்திலே பாலைவனவழியாக, 1

5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் 1 அலைந்து திரிந்தார்கள். 1

6தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், 1 அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். 1

7வாழும் ஊருக்குப்போய்ச்சேர, 1 அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். 1

8தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, 1 பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, 1

9அவருடைய கிருபையினிமித்தமும், 1 மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 1

10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, 1 உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், 1

11காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, 1 ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். 1

12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; 1 உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். 1

13தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 1 அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். 1

14காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, 1 அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். 1

15யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, 1 இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, 1

16அவருடைய கிருபையினிமித்தமும், 1 மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 1

17புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் 1 தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். 1

18அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, 1 அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். 1

19தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; 1 அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். 1

20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, 1 அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். 1

21அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், 1 மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 1

22நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. 1

23கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, 1

24அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், 1 ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். 1

25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, 1 அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். 1

26அவர்கள் வானத்தில் ஏறி, 1 ஆழங்களில் இறங்குகிறார்கள், 1 அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. 1

27குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; 1 அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. 1

28அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். 1

29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. 1

30அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; 1 தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். 1

31அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், 1 மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 1

32மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, 1 மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. 1

33அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், 1

34குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். 1

35அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், 1 வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, 1

36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; 1 அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, 1

37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், 1 அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். 1

38அவர்களை ஆசீர்வதிக்கிறார், 1 மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். 1

39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், 1 துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். 1

40அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, 1 வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, 1

41எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, 1 உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, 1 அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். 1

42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; 1 நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். 1

43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; 1 ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

← Psalms 106Read In The App, Free →Psalms 108 →

Study Psalms 107

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150