Psalms 18
1என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 1
2யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், 1 என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், 1 என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். 1
3துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். 1
4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. 1
5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; 1 மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. 1
6எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், 1 என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், 1 அவர் காதுகளில் விழுந்தது. 1
7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, 1 மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. 1
8அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, 1 அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; 1 அதனால் தழல் மூண்டது. 1
9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; 1 அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 1
10கேருபீன்மேல் + 18:10 கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ஏறி வேகமாகச் சென்றார்; 1 காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். 1
11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; 1 தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். 1
12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், 1 கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. 1
13யெகோவா வானங்களிலே குமுறினார், 1 உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; 1 + 18:13 சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லைகல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. 1
14தம்முடைய அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்தார்; 1 மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். 1
15அப்பொழுது யெகோவாவே, 1 உம்முடைய கண்டிப்பினாலும் 1 உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, 1 உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. 1
16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, 1 பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். 1
17என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் 1 என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 1
18என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; 1 யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். 1
19என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், 1 விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, 1 என்னைத் தப்புவித்தார். 1
20யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். 1
21ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; 1 நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. 1
22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; 1 அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 1
23உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, 1 என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 1
24ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், 1 தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். 1
25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், 1 உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 1
26புனிதனுக்கு நீர் புனிதராகவும், 1 மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 1
27தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; 1 மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 1
28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 1 என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 1
29உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; 1 என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 1
30தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1
31யெகோவாவை தவிர தேவன் யார்? 1 நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? 1
32என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 1
33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, 1 உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். 1
34வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, 1 என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 1
35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 1 உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; 1 உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும். 1
36என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1
37என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, 1 அவர்களைப் பிடித்தேன்; 1 அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. 1
38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். 1
39போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். 1
40நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, 1 என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 1
41அவர்கள் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; 1 யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. 1
42நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, 1 தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 1
43மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், 1 தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; 1 நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். 1
44அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; 1 அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள். 1
45அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். 1
46யெகோவா உயிருள்ளவர்; 1 என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; 1 என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 1
47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். 1 அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். 1
48அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, 1 கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 1
49இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, 1 உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். 1
50தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, 1 தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் 1 அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.