Psalms 118
1யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. 1
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. 1
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 1
5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 1
6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; 1 மனிதன் எனக்கு என்ன செய்வான்? 1
7எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; 1 என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன். 1
8மனிதனை நம்புவதைவிட, 1 யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். 1
9பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். 1
10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; 1 யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். 1
14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானார். 1
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; 1 யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 1
16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; 1 யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 1
17நான் சாகாமல், பிழைத்திருந்து, 1 யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன். 1
18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 1
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; 1 நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன். 1
20யெகோவாவின் வாசல் இதுவே; 1 நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள். 1
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், 1 நான் உம்மைத் துதிப்பேன். 1
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, 1 மூலைக்குத் தலைக்கல்லானது. 1
23அது யெகோவாவாலே ஆனது, 1 அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 1
24இது யெகோவா உண்டாக்கின நாள்; 1 இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம். 1
25யெகோவாவே, இரட்சியும்; 1 யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும். 1
26யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 1 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து 1 உங்களை ஆசீர்வதிக்கிறோம். 1
27யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; 1 பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். 1
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 1
29யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது.