Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 21

1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; 1 உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! 1

2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, 1 அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) 1

3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, 1 அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். 1

4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; 1 நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். 1

5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; 1 மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். 1

6அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; 1 அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 1

7ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; 1 உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். 1

8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; 1 உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 1

9உமது கோபத்தின் காலத்திலே 1 அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; 1 யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; 1 நெருப்பு அவர்களை அழிக்கும். 1

10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் 1 அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 1

11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; 1 தீவினை செய்ய முயன்றார்கள்; 1 ஒன்றும் வாய்க்காமல்போனது. 1

12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 1

13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 1 அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

← Psalms 20Read In The App, Free →Psalms 22 →

Study Psalms 21

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150