Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 34

1யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; 1 அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். 1

2யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; 1 ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 1

3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; 1 நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 1

4நான் யெகோவாவை தேடினேன், 1 அவர் எனக்குச் செவிகொடுத்து, 1 என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 1

5அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; 1 அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. 1

6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, 1 அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். 1

7யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி 1 முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். 1

8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; 1 அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 1

9யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; 1 அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 1

10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; 1 யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. 1

11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; 1 யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். 1

12நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, 1 நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? 1

13உன் நாவை தீங்கிற்கும், 1 உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள். 1

14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். 1

15யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; 1 அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. 1

16தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, 1 யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. 1

17நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, 1 அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 1

18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, 1 நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். 1

19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், 1 யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். 1

20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; 1 அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. 1

21தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; 1 நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். 1

22யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; 1 அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

← Psalms 33Read In The App, Free →Psalms 35 →

Study Psalms 34

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150