Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 96

1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள். 1

2யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, 1 நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள். 1

3தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், 1 எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 1

4யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 1

5எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; 1 யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர். 1

6மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, 1 வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. 1

7மக்களின் வம்சங்களே, 1 யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1

8யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, 1 காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள். 1

9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; 1 பூமியில் உள்ளவர்களே, 1 நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 1

10யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். 1 அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள். 1

11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, 1 கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக. 1

12நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; 1 அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும். 1

13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 1 அவர் உலகத்தை நீதியோடும், 1 மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

← Psalms 95Read In The App, Free →Psalms 97 →

Study Psalms 96

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150