Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 106

1அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1

2யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, 1 அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்? 1

3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், 1 எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள். 1

4யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, 1 உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, 1 உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு, 1

5உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, 1 உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். 1

6எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, 1 அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம். 1

7எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், 1 உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய், 1 சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள். 1

8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, 1 தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார். 1

9அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; 1 காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார். 1

10பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். 1

11அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; 1 அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை. 1

12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, 1 அவருடைய துதியைப் பாடினார்கள். 1

13ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; 1 அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல், 1

14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, 1 பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1

15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், 1 அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார். 1

16முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், 1 யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள். 1

17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, 1 அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது. 1

18அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; 1 நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது. 1

19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, 1 வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள். 1

20தங்களுடைய மகிமையைப் 1 புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். 1

21எகிப்திலே பெரிய செயல்களையும், 1 காமின் தேசத்திலே அதிசயங்களையும், 1 சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 1

22தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள். 1

23ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்; 1 அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, 1 அவர்களை அவர் அழிக்காதபடி, 1 அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு, 1 அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான். 1

24அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், 1 விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள். 1

25யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், 1 தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள். 1

26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், 1 அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும், 1

27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், 1 அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார். 1

28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, 1 உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு, 1

29தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; 1 ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. 1

30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; 1 அதினால் வாதை நிறுத்தப்பட்டது. 1

31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 1

32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; 1 அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. 1

33அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, 1 தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான். 1

34யெகோவா தங்களுக்குச் சொன்னபடி, 1 அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை. 1

35அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று; 1

36அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; 1 அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது. 1

37அவர்கள் தங்களுடைய மகன்களையும் 1 தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். 1

38அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, 1 தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; 1 தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. 1

39அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி, 1 தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள். 1

40அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; 1 அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். 1

41அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; 1 அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள். 1

42அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; 1 அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். 1

43அநேகமுறை அவர்களை விடுவித்தார்; 1 அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து, 1 தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். 1

44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, 1 அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து, 1

45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, 1 தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து, 1

46அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். 1

47எங்கள் தேவனாகிய யெகோவாவே, 1 நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, 1 உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, 1 எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும். 1

48இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா 1 அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். 1 மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, 1 அல்லேலூயா.

← Psalms 105Read In The App, Free →Psalms 107 →

Study Psalms 106

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150