Psalms 98
1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; 1 அவருடைய வலது கரமும், 1 அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. 1
2யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, 1 தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். 1
3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; 1 பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. 1
4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் 1 யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1
5சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், 1 சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள். 1
6யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் 1 எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள். 1
7கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. 1
8யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, 1 மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும். 1
9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 1 உலகத்தை நீதியோடும் 1 மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.