Psalms 49
1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். 1
2பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் 1 ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். 1
3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 1
4என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, 1 என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 1
5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் 1 என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், 1 நான் பயப்படவேண்டியதென்ன? 1
6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 1
7ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் + 49:7 தன்னையே அழிவைக் காணாமல் 1 இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 1
8அவனை மீட்டுக்கொள்ளவும், 1 அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. 1
9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; 1 அது ஒருபோதும் முடியாது. 1
10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, 1 தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 1
11தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், 1 தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் 1 இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; 1 அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். 1
12ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். 1
13இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; 1 ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) 1
14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; 1 மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; 1 செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; 1 அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். 1
15ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், 1 அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) 1
16ஒருவன் செல்வந்தனாகி, 1 அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 1
17அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; 1 அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 1
18அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: 1 நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், 1
19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத 1 தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். 1
20மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் 1 அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.