Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 38

1யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; 1 உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 1

2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 1 உமது கை என்னைத் தாங்குகிறது. 1

3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 1 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 1

4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, 1 அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. 1

5என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 1

6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 1

7என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; 1 என் உடலில் ஆரோக்கியம் இல்லை. 1

8நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; 1 என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். 1

9ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; 1 என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. 1

10என் உள்ளம் குழம்பி அலைகிறது; 1 என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. 1

11என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; 1 என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 1

12என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 1 எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, 1 நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 1

13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், 1 ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 1

14காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். 1

15யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; 1 என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். 1

16அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; 1 என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. 1

17நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; 1 என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 1

18என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, 1 என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். 1

19என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; 1 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். 1

20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், 1 நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 1

21யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; 1 என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். 1

22என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, 1 எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

← Psalms 37Read In The App, Free →Psalms 39 →

Study Psalms 38

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150