Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 29

1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1

2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; 1 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 1

3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; 1 மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; 1 யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 1

4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; 1 யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. 1

5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; 1 யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 1

6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், 1 சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். 1

7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். 1

8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; 1 யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். 1

9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, 1 காடுகளை வெளியாக்கும்; 1 அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் 1 யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 1

10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; 1 யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். 1

11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; 1 யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, 1 அவர்களை ஆசீர்வதிப்பார்.

← Psalms 28Read In The App, Free →Psalms 30 →

Study Psalms 29

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150