Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 132

1யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும். 1

2அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், 1 யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை, 1

3என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, 1

4என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், 1 என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, 1

5யெகோவாவுக்கு ஆணையிட்டு, 1 யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான். 1

6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, 1 வயல்வெளிகளில் அதைக் கண்டோம். 1

7அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, 1 அவர் பாதத்தில் பணிவோம். 1

8யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும். 1

9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும். 1

10நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும். 1

11உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், 1

12உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், 1 நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், 1 அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், 1 யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். 1

13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, 1 அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார். 1

14இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; 1 இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன். 1

15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; 1 அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். 1

16அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; 1 அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். 1

17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; 1 நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன். 1

18அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; 1 அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

← Psalms 131Read In The App, Free →Psalms 133 →

Study Psalms 132

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150