Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 7

1என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; 1 என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். 1

2எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், 1 விடுவிக்கிறவன் இல்லாததால், 1 அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 1

3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1

4என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், 1 காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 1

5எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, 1 என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, 1 என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) 1

6யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, 1 என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, 1 எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 1

7மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; 1 அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். 1

8யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; 1 யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் 1 எனக்கு நியாயம்செய்யும். 1

9துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; 1 நீதிமானை நிலைநிறுத்தும்; 1 நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், 1 சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். 1

10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. 1

11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; 1 அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். 1

12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1

13அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; 1 தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். 1

14இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; 1 தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 1

15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 1 தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 1

16அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், 1 அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். 1

17நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். 1 நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

← Psalms 6Read In The App, Free →Psalms 8 →

Study Psalms 7

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150