Psalms 37
1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1
2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, 1 பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். 1
3யெகோவாவை நம்பி நன்மைசெய்; 1 தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 1
4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; 1 அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 1
5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 1 அவர்மேல் நம்பிக்கையாயிரு; 1 அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 1
6உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், 1 உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். 1
7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; 1 காரியசித்தியுள்ளவன் மேலும் 1 தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. 1
8கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; 1 பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். 1
9பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; 1 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ 1 பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 1
10இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; 1 அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 1
11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, 1 மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 1
12துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, 1 அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். 1
13ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; 1 அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 1
14சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், 1 செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், 1 துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 1
15ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; 1 அவர்கள் வில்லுகள் முறியும். 1
16அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, 1 நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 1
17துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; 1 நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். 1
18உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; 1 அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 1
19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, 1 பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 1
20துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், 1 யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல 1 புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். 1
21துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; 1 நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 1
22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; 1 அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். 1
23நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், 1 அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 1
24அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; 1 யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 1
25நான் இளைஞனாயிருந்தேன், 1 முதிர்வயதுள்ளவனுமானேன்; 1 ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், 1 அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. 1
26அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், 1 அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 1
27தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 1
28யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; 1 அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; 1 அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; 1 துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். 1
29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, 1 என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். 1
30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, 1 அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 1
31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; 1 அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 1
32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, 1 அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 1
33யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; 1 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. 1
34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1
35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் 1 அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 1
36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 1 அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 1 அவன் காணப்படவில்லை. 1
37நீ உத்தமனை நோக்கி, 1 செம்மையானவனைப் பார்த்திரு; 1 அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். 1
38அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; 1 அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. 1
39நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; 1 இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். 1
40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, 1 அவர்களை விடுவிப்பார்; 1 அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், 1 அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.